கற்றல் உபகரணங்கள் மூதூரில் வழங்கிவைப்பு!

ஹூஸ்பர்

திருகோணமலை மூதூர் பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் வாழும் சின்னக் குளம் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வு நேற்று (வியாழக்கிழமை) பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றதுடன் இதனை திருகோணமலை மாவட்ட செயலக பிரதம கணக்காளர் பரமேஸ்வரனின் கோரிக்கைக்கு அமைவாக உலக சுகாதார ஸ்தாபனத்தில் கடமையாற்றும் குணாளன் என்பவரின் முயற்சியின் பயனாக மறைந்த சுரேஸ் குமாரின் நினைவாக கந்தையா தொண்டு நிறுவனத்தால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. சுமார் 75 மாணவ மாணவிகளுக்காக இது வழங்கப்பட்டன.

மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கவும் வறுமை நிலை கல்விக்கு தடை இல்லை என்பதை வைத்து கற்றல் உபகரணங்களின் பிரதிபலனாக எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த நிகழ்வில்  மாவட்ட செயலக சமூக சேவைத் திணைக்கள இணைப்பாளர் த.பிரணவன், மூதூர் பிரதேச செயலக சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் சில்மியா உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.