சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு எதிராக குரல் கொடுப்போம் தொனிப்பொருளில் பேரணியும் விழிப்புணர்வுக் கூட்டமும்!

சிறுவர் தினத்தை முன்னிட்டு, சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக குரல் கொடுப்போம் என்னும் தொனிப்பொருளில் மாபெரும் கவனவீர்ப்புப் பேரணியும் விழிப்புணர்வு கூட்டமும் நேற்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகின.

இந்த நிகழ்வு சங்கானை கலாசார மண்டபத்தில் இருந்து ஆரம்பமாகி, பேரணியாக சங்கானை பஸ் நிலையத்தை வந்தடைந்தது. பின்னர் சங்கானையில் பிரமாண்டமான முறையில் விழிப்புணர்வுக் கூட்டம் இடம்பெற்றது.

மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது. மாணவர்களின் வரவேற்பு நடனம், அதனையடுத்து விருந்தினர்களின் உரை, மாணவர்களது பேச்சு உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன.

சங்கானை பிரதேச செயலர் திருமதி பிரேமினி பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனவிரத்ன ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டமையுடன், வலிகாமம் கல்வி வலய பணிப்பாளர் ரவீந்திரன், உலக தரிசனம் நிறுவனத்தின் கள முகாமையாளர் பாக்கியநாதன் ரொஹாஸ், சங்கானை பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி வை.யதுனந்தன், வலி.மேற்கு பிரதேச சபையின் செயலாளர் பாலரூபன், வட்டுக்கோட்டை, மானிப்பாய், இளவாலை பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.