வன்னிவிளாங்குளம் முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்!

சண்முகம்  தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களில் ஒன்றான வன்னிவிளாங்குளம் ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் நேற்று (வெள்ளிக்கிழமை) மிக சிறப்பாக இடம்பெற்றது.

நண்பகல் கொடியேற்றப்பட்டு  விசேட அபிஷேகங்கள் இடம்பெற்று பூசை வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றன. இதனை தொடர்ந்து இரவு பாரம்பரிய முறைப்படி மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு விசேட பொங்கல் வழிபாடுகள் இடம்பெற்றது.

இதேவேளை காலை முதல் ஆலயத்துக்கு அதிகளவான பக்தர்கள் வருகை தந்து
காவடி, பால்செம்பு, கற்பூரசட்டி உள்ளிட்ட தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றிவருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.