டெங்கைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் திருகோணமலையில் ஆலோசனை கூட்;டம்! ஆளுநர் செந்தில் தலைமையில்
ஹூஸ்பர்
கிழக்கு மாகாணத்தில் டெங்கை கட்டுப்படுத்துவது தொடர்பிலான ஆலோசனை கூட்டம்
மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் திருகோணமலை மாகாண சபை
கட்டடத்தில் இடம்பெற்றது.
இதில் டெங்கு பரவும் வலயங்களாகக் காணப்படும் பிரதேசங்களில் புதிய திட்டங்களை கையாளுவதன் மூலமாக அதில் இருந்து பாதுகாத்து குறைக்க நடவடிக்கை எடுப்பது பற்றியும் ஆளுனர் உயரதிகாரியிடத்தில் பணிப்புரை விடுத்தார்.
இதில் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட
அரசாங்க அதிபர்கள், சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள், பொலிஸ் உயரதிகாரிகள், உள்ளூராட்சி மன்ற அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை