சமூகப் போராட்டம் தோல்வியடையும் போது மதபோராட்டத்துக்கு சிலர் தயாராகின்றனர்!  அமைச்சர் பிரசன்ன சாட்டை

சமூகப் போராட்டம் தோல்வியடையும் போது அதன் பின்னணியில் உள்ள குழுக்கள் மதப்போராட்டத்துக்குத் தயாராகும்இ அதுவும் தோல்வியுற்றால் நாட்டில் இனவாதத்தை விதைப்பார்கள் என ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரும்இ நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாட்டை அராஜகம் செய்யும் இவ்வாறான குழுக்களுக்கு எதிராக யார் மூக்கை நுழைத்தாலும் பொருட்படுத்தாது அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெறுப்புப் பேச்சுக்களை பரப்பி மக்களை அடைத்து வைக்கும் நபர்களுக்கும் குழுக்களுக்கும் எதிராக மக்கள் கிராம மட்டத்தில் நிற்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் ஆணைக்குழுவிற்கு வருகை தந்த போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த வருடம் மே மாதம் 9 ஆம் திகதி உடுகம்பொலவில் உள்ள தனது வீட்டை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தியமை தொடர்பில் அமைச்சர் இதற்கு முன்னர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார்.

அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு –

கேள்வி: நீங்கள் இதற்கு முன்னரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வந்திருக்கிறீர்கள். இன்று ஏன் வந்தீர்கள்?

பதில்- கடந்த வருடம் மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற வீடு எரிப்பு சம்பவங்கள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அது தொடர்பான மேலதிக வேலைகளுக்காக இன்று வருமாறு கூறி  இருந்தார்கள்.

கேள்வி- இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் திருப்திகரமாக உள்ளனவா?

பதில்- வீடுகளை எரித்ததன் மூலம் எங்களின் மனித உரிமைகள் மீறப்பட்டன. காலிமுகத் திடல்  போராட்டத்தில்  தாக்குதல் நடத்தப்பட்டதாலேயே எங்கள் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன என சிலர் கூறுகின்றனர்.

ஆனால் இந்த சம்பவங்கள் நடப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே பாதுகாப்பு சபையால் இது நடக்கலாம் என்று தெரிவித்திருந்தது. இருந்த போதிலும் தேவையான முடிவுகள் எடுக்கப்படவில்லை.குறைந்த பட்சம் எங்களின் வீடுகள் தீப்பற்றி எரியும் போது பாதுகாப்பு படையினர் குறைந்தபட்ச பலத்தை கூட பயன்படுத்தவில்லை.

கேள்வி- நீதியை எதிர்பார்க்கிறீர்களா?

பதில்- குறைந்த பட்சம் இவ்வாறானதொரு விடயம் இனிமேல் நடக்கக் கூடாது. அதனாலேயே இவ்வாறு செய்கின்றோம்.

கேள்வி- இன்னும் போராட்டம் ஓயவில்லை என்று போராளிகள் கூறுகின்றார்களே….?

பதில்- அன்றைய பொருளாதார பிரச்சினை காரணமாக மக்கள் அமைதியான போராட்டத்தை நடத்தினர். வீடுகளை எரிக்கவும்இ மக்களை அடித்து கொல்லவும் எதிர்பார்க்கவில்லை. அவற்றை அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்பட்ட சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் செய்தவை. விபச்சாரிகள்இ கடத்தல்காரர்கள்இ போதைப்பொருள் வியாபாரிகள் கடைசி நிமிடத்தில் போராட்டத்தை அபகரித்ததாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகின்றனர். நாங்கள் ஆரம்பத்தில் இதைக்  கூறியபோது எங்கள் மீது குற்றம் சாட்டினார்கள்.

கேள்வி- எதிர்வரும் அரசியல் விவகாரங்கள் எப்படி?

பதில்- ஒரு வருடத்துக்கு முன்னர் நாம் எதிர்கொண்ட நிலைமை எமக்கே தெரியும். எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலை குறைகிறது. மக்களுக்கு ஓரளவு நிம்மதி கிடைக்கிறது. இதை பொறுத்துக்கொண்ட மக்களை நாம் மதிக்க வேண்டும். அவர்கள் பெரும் தியாகங்களைச் செய்கிறார்கள்.

ஜனாதிபதிக்கு இந்த அரசாங்கத்தை தொடர்ந்து நடத்த அனுமதித்தால் நாட்டை சிறந்த நிலைக்கு கொண்டு வர முடியும்.

ஆனால் சமூகப் போராட்டம் தோல்வியடைந்ததால்இ அதன் பின்னணியில் நாட்டை அராஜகம் செய்யும் குழுக்கள் செயற்படுகின்றன. இதில் உள்ளவர்கள் இப்போது மதப் போராட்டத்திற்குத் தயாராகி வருகின்றனர். ஆனால்இ அரசு இவர்களின் பேச்சைக் கேட்காமல் இதற்கு எதிராக கடுமையாகச் செயற்பட வேண்டும்.

கேள்வி- நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி விசேட அறிக்கையொன்றை விடுத்தார். அது பற்றி நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?

பதில்- ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது சில நடைமுறை விடயங்களைக் கூறினார். தற்போதைய ஜனாதிபதி மிகவும் பொருளாதார சவால்களை எதிர்கொண்ட தலைவர். இந்த நாட்டை ஒரு குறிப்பிட்ட நிலைக்கு கொண்டு வர அவருக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.

மேலும்இ போராடி மக்களைக் கோபப்படுத்தி வெறுப்புப் பேச்சுக்களை பரப்பும் மக்கள் மற்றும் குழுக்களுக்கு எதிராக மக்கள் கிராம மட்டத்தில் எழுந்து நிற்க வேண்டும்.

கேள்வி- பல்கலைக்கழக சகல மாணவர் ஒன்றியம் எதிர்வரும் 7ஆம் திகதி கொழும்புக்கு வரு கிறார்கள். என்ன நடக்கும்?

பதில்- பல்கலைக்கழக மாணவர்கள் விரும்பி இங்கு வருவதில்லை. அவர்களுக்கு பணம் கொடுத்து வலுக் கட்டாயத்தில் கொண்டு வந்தவர்கள். அந்த வன்முறைச் செயல்களைத் தடுப்பதற்காக நாம் செயற்படும் போது ஒரு சிலர் ஊடகங்கள் முன் வந்து கூச்சல் போடுகின்றனர். அரச சார்பற்ற நிறுவனங்களின் பணத்திற்காகப் பேசுகின்றனர். இதை அரசாங்கம் என்ற வகையில் கட்டுப்படுத்த வேண்டும்.

கேள்வி- எதிர்காலத்தில் அமைச்சரவை மாறுமா?

பதில்- இது ஜனாதிபதி எடுக்கும் தீர்மானம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.