கஜேந்திரகுமார் மீதான படுகொலை முயற்சி இலங்கை அரசின் இனவாதக் கோரமுகமே!  சீமான் ஆவேசம்

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான படுகொலை முயற்சி இலங்கை அரசின் இனவாத கோரமுகத்தின் மற்றொரு வெளிப்பாடு என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரை சுட்டுப் படுகொலை செய்வதற்கு இலங்கை புலனாய்வுத்துறையினர் முயன்றுள்ளமை பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இருப்பையும் திரைமறைவில் அழித்தொழிக்கும் இலங்கை இனவெறி அரசின் சதிச்செயலே இக்கொலைமுயற்சி நிகழ்வு என்றும் சாடியுள்ளார்.

தமிழர்கள் மீதான இலங்கை அரசின் இனவெறி அடக்குமுறைகள் இன்னும் நிறைவடையவில்லை என்பதை இந்த சம்பவம் மூலமாவது பன்னாட்டுச்சமூகம் உணர்ந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதேநேரம் அரசியல் உரிமையைப் பெற்றிட கனடா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து பொதுவாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை ஐ.நா. மன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.