யாழ்ப்பாணம் – கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு காரைதீவில் மஞ்சள் நீரால் கால்கழுவி வரவேற்பு!
( வி.ரி. சகாதேவராஜா)
யாழ்ப்பாணம் செல்வச் சந்நதி ஆலயத்திலிருந்து புறப்பட்டு ஐந்து மாவட்டங்களை கடந்து அம்பாறை மாவட்டத்திற்கு வருகைதந்த ஜெயாவேல்சாமி தலைமையிலான கதிர்காம பாதயாத்திரை குழுவினருக்கு காரைதீவில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கடந்த 26 நாள்களாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை,
மட்டக்களப்பு ஆகிய ஐந்து மாவட்டங்களைக் கடந்து வெள்ளிக்கிழமை காரைதீவிற்கு
வருகைதந்த போது மஞ்சள் நீரால் கால்கழுவி பெருவரவேற்பு அளிக்கப்பட்டது.
பாதயாத்திரை குழுவின் ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில் நடைபெற்ற இந்த
நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலாளர் சிவ ஜெகராஜன், மாவட்ட இந்து கலாசார
உத்தியோகத்தர் கு. ஜெயராஜ், நீராகாரம் வழங்கிய முருகபக்தர் எஸ்.தேவதாஸ்
ஆகியோர் பெருவரவேற்பளித்தனர்.
பின்னர் அவர்கள் காரைதீவு ஸ்ரீகண்ணகை அம்மன் ஆலயத்தை தரிசித்து வெள்ளிக்கிழமை
காரைதீவில் முழுநாளும் தங்கியிருந்தனர்.
எதிர்வரும் 11ஆம் திகதி உகந்தை மலையை அடைந்து 12 ஆம் திகதி காட்டுப்பாதை
திறக்கப்பட்டதும் முதல் நாள் காட்டுக்குள் பிரவேசிக்க இருக்கின்றார்கள்.
கருத்துக்களேதுமில்லை