33 வருடங்களின் பின்னர் பொத்துவில் கனகர்கிராம மக்கள் குடியேற்ற ஏற்பாடு கலையரசன் எம்.பி. சமுகம்
( வி.ரி. சகாதேவராஜா)
1990 களில் இடம்பெயர்ந்த பொத்துவில் அறுபதாம் கட்டை கனகர் கிராம மக்கள் 33
வருடங்களின் பின் மீள்குடியேற வசதியாக காடுமண்டி கிடந்த அந்தப் பிரதேசம்
இரண்டாம் கட்டமாக நேற்று (சனிக்கிழமை) துப்புரவாக்கல் பணி இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் அங்கு சமுகமளித்திருந்தார்.
இப் பிரதேசம் ஜேசிபி இயந்திரம் மூலம் துப்புரவாக்கப்பட்டு வருகிறது. பொத்துவில் பிரதேச சபை முன்னாள் உப தவிசாளரும் சமுக செயற்பாட்டாளருமான பெருமாள் பார்த்தீபன் அரச அனுமதியுடன் இந்தப் பணியில் ஈடுபட்டு வருகிறார். கனகர் கிராம மக்களும் படையினரும் சமுகமளித்திருந்தனர்.
226 பேரில் முதல் கட்டமாக 76 பேருக்கு காணியை விடுவிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. ஒருவருக்கு ஓர் ஏக்கர் 20 பேர்ச்சஸ் காணி
வழங்கப்படும். பயிர்ச்செய்கைக்காக ஓர் ஏக்கர் காணியும் வீடு அமைக்க 20
பேர்ச்சஸ் காணியும் வழங்கப்படவிருக்கிறது
கருத்துக்களேதுமில்லை