மாவனல்லை பள்ளிவாயிலில் முன்மாதிரி கௌரவிப்பு நிகழ்வு

மாவனல்லை ஹிங்குளோயா மஸ்ஜிதுல் ஹூதா பள்ளிவாயலில் சுமார் 35 வருடங்கள் நிர்வாக சபையில் சேவையாற்றி பள்ளிவாயலிற்கும் ஊருக்கும் பல சேவைகளைச் செய்த டாக்கடர் .ஹமீட்  ஏ அஸீஸ் அவர்களை பொன்னாடை போர்த்தி கௌரவிக்கும் நிகழ்வு ஜூம்ஆ தொழுகையின் பின்னர் பள்ளிவாயிலில் நடைபெற்றது.

இவரோடு அல்ஹாஜ் முபாரக் மற்றும் சபுமல் நிறுவனத்தின் உரிமையாளர், அல்ஹாஜ் கமால்தீனும் கௌரவிக்கப்பட்டார்.

மேலும் கடந்த பல வருடங்களாக நிர்வாக சபையில் பணியாற்றியர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று அதே தினத்தில் இஷாத் தொழுகையின் பின்னர் மாவனல்லை ராழியா வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வுகள் பள்ளிவாயலின் தந்போதைய நிர்வாக சபையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்நிகழ்வுக்கு பிரதம அதீதியாக வருகை தந்திருந்த முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இசட்.ஏ.எம். பயைசல் அங்கு உரையாற்றும் போது,
பிரச்சினைகளும் போட்டிகளும் காணப்படும் சூழ்நிலையில் பதவியில் இருந்த ஒரு பள்ளிவாயல் நிர்வாக சபையை கௌரவிப்பது முன்னுதாரணமான செயற்பாடாகும் எனத் தெரிவித்த அவர்,

  தான் பணிப்பாளராக பதவி ஏற்ற காலம் தொட்டு இன்று வரையிலான காலப்பகுதியில் இப்படியான நிகழ்வொன்று நடைபெறவில்லை எனவும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.