தரம் – 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு கொமர்சல்வங்கியால் கௌரவம்! முல்லைத்தீவில் நடந்தது

சண்முகம்  தவசீலன்

2021 ஆம் ஆண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற முல்லைத்தீவு மாவட்ட மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு  கொமர்ஷல் வங்கி, முள்ளியவளை கிளையினரால் முள்ளியவளை மாஞ்சோலை பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி  மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.

கொமர்ஷல் வங்கியில் சேமிப்பை மேற்கொண்டிருந்த 2021ஆம் ஆண்டு தரம் 05
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பாடசாலை மட்டத்தில் முதல் 03
இடங்களை பெற்ற மாணவர்களுக்கு முறையே  ரூ.10,000, ரூ.7,500, ரூ.5,000
பணப்பரிசுடன், சான்றிதழ்களும்,பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

கொமர்ஷல் வங்கி, முள்ளியவளை கிளையின் முகாமையாளர் கந்தவனம் சுதனன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  பிரதம விருந்தினராக முல்லைத்தீவு வலயக்கல்வி பணிப்பாளர் ரத்தினம் தமிழ்மாறனும், சிறப்பு விருந்தினராக முன்னாள் முல்லைத்தீவு வலய உதவிக்கல்வி பணிப்பாளர் நமசிவாயம் அருணாசலம் மற்றும் முல்லைத்தீவு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்க தலைவர் சுப்பிரமணியம் ஞானேஸ்வரராசாவும், கௌரவ
விருந்தினராக வீரமங்கை திருமதி அகிலதிருநாயகி ஸ்ரீசெயானந்தபவனும் முல்லைத்தீவு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்க பொது முகாமையாளர் திருமதி சுமித்தா கலியுகனும்  கலந்துகொண்டு சாதனையாளர்களுக்கு சான்றிதழ்களும்,பரிசில்களும் வழங்கிக் கௌரவித்தனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.