புலம்பெயர் உறவுகளுக்கும் எமக்கும் இடையிலான நல்லுறவை சீர்குலைப்பதே அலிசப்ரியின் நோக்கம்! விக்னேஸ்வரன் கண்டனம்
இலங்கைவாழ் தமிழ்மக்களுக்கும், புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ்மக்களுக்கும் இடையில் நிலவும் நல்லுறவை சீர்குலைக்கவேண்டும் என்ற நோக்கிலேயே அமைச்சர் அலி சப்ரி இத்தகையதொரு கருத்தை வெளியிட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டிய தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன், அக்கருத்தை முற்றாக நிராகரிப்பதாகத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
புலம்பெயர் தமிழ்மக்கள் எமக்கு அவசியமான நிதியுதவிகளை வழங்கிவருகின்றனர். இருப்பினும் அதற்குப் பதிலாக அவர்களது தேவைக்கேற்றவாறு அல்லது நிபந்தனைகளுக்கு அமைவாகச் செயற்படவேண்டும் என்று அவர்கள் ஒருபோதும் கூறியதில்லை. மாறாக நாம் எமது நாட்டின் நிலைவரத்தைக் கருத்திற்கொண்டு அதற்கேற்றவாறு செயலாற்றிவருகின்றோம்.
அவ்வாறிருக்கையில் நாம் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடனோ அல்லது மக்களுடனோ இணைந்து செயற்படக்கூடாது என்று கூறுவதாக இருந்தால், முதலில் எமது பிரச்சினைக்குரிய தீர்வை அரசாங்கம் வழங்கவேண்டும். அதற்குரிய திட்டத்தை எம்மிடம் கையளிக்கவேண்டும். அதனைவிடுத்து இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதால் எதுவும் நடக்கப்போவதில்லை. – என்றும் விக்கினேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.
கருத்துக்களேதுமில்லை