சாய்ந்தமருது வொலிவேரியன் பிரதேசத்தில் போதைப் பொருளுடன் ஒருவர் கைதானார்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வொலிவேரியன் கிராமத்தில் பலநாள்களாகத் தேடப்பட்டு வந்த போதைப்பொருள் விற்பனையாளர் திங்கட்கிழமை
கைது செய்யப்பட்டுள்ளார்.
சாய்ந்தமருது பொலிஸாருக்கு பிரதேச மக்களால் கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து
வொலிவேரியன் கிராமத்தில் வசிக்கும் 37 வயதுடையவரும் நான்கு பிள்ளைகளின்
தந்தையுமான சந்தேக நபரே சாய்ந்தமருது பொலிஸ் நிலைய போதை ஒழிப்புப்
பிரிவால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ.எச்.எல்.எம். புத்திக
வழிகாட்டலிலும் சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எம்.எம்.
சம்சுதீன் அனுசரணையுடன் போதை ஒழிப்பு குற்றத் தடுப்புப் பிரிவு உதவி
பொலிஸ் உத்தியோகத்தர் ஏ.எல்.எம். ரவூப் தலைமையிலான குழுவால் மேற்படி
சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.
மேற்படி சந்தேக நபரைத் பொலிஸார் தேடி வந்த நிலையில்இ சந்தேக நபரைப்
போதைப் பொருளுடன் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக சாய்ந்தமருது பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டுள்ளனர்
கருத்துக்களேதுமில்லை