பல்லவராஜ மன்னன்சிலை பூநகரியில் திறந்துவைப்பு!
பூநகரி பிரதேச சபையால் பல்லவராஜன் கட்டு சந்தியில் நிர்மாணிக்கப்பட்ட பல்லவராஜ மன்னன் சிலை திறந்து வைக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை காலை பூநகரி பிரதேச
சபையின் செயலாளர் இரட்ணம் தயாபரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பிரதம விருந்தினராகக் கலந்து
குறித்த சிலையை திறந்து வைத்தார்.
மேற்படி நிகழ்வில் முன்னாள் தவிசாளர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், முன்னாள் பிரதேச சபை செயலாளர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் உரையாற்றிருந்தார்.
அவர் தனதுரையில் தெரிவித்தவை வருமாறு –
எங்களுடைய அடையாளங்கள் அழிக்கப்படுகின்றன. நாங்கள் வெற்றிகொண்டவற்றை
எல்லாம் வேறு இனம் மாற்றி அடிமையாக வைத்திருக்க நினைக்கிறார்கள்.
பூநகரியிலிருந்து 2500ஆண்டுகளுக்கு முன்னரான தமிழ் நாகரீகம் தொற்றம் பெற்றது.
இந்த நாடு நேர்மையான ஐனநாயக நாடாக செல்கிறதா? ஆட்சி
ஐனநாயகத்தில்தான் நிற்கிறதா? இலங்கை இந்திய ஒப்பந்தம் எழுதி கிட்டத்தட்ட
40 ஆண்டுகள் ஆகின்றன. சின்ன சின்ன சரத்துக்களை கூட நடைமுறைப்படுத்தவில்லை.
ஜனாதிபதி சொல்லியிருக்கிறார். நாட்டில் தேர்தல் நடைபெற்றால் எந்த
கட்சியும் 50 வீதத்தை கூட பெறமுடியாது என்று. கடந்த தேர்தலில் இவருடைய
கட்சி பூச்சியம் வாக்குகளைப் பெற்றிருந்தது. எந்தவொரு தொகுதியிலும் வெற்றி
பெறவில்லை. சூழ்ச்சிமூலமே ஜனாதிபதியாக வந்தார். தன்னைப்போலவே ஏனைய
கட்சிகளும் குழம்பியுள்ளன என சிங்கள மக்களிடம் மாயையை உருவாக்கி
ஐனநாயகத்தைக் குழிதோண்டி புதைக்க முனைகின்றார்.தேர்தல் நடத்தாத ஆட்சியை
கொண்டு செல்ல முனைகின்றார்.
அலிசப்ரி சொல்கிறார் புலம்பெயர்ந்தவர்களை பயன்படுத்தி தமிழ் மக்கள் ஆயுத
கலாசாரத்தை உருவாக்கக்கூடாது என்று. கடந்த இரண்டு மூன்று நாள்களுக்கு
முன்பு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் அவர்களை சுட முயற்சித்தனர்
இந்த அரசாங்கத்தின் உளவாளிகள்.
நாங்கள் ஆயுதமற்ற ஜனநாயக உரிமையுடன் கூடிய தீர்வை நோக்கியே நகர்கின்றோம்.
தொடர்ந்து ஒலி, ஒளிபரப்பு ஒழுங்கு படுத்தல் ஆணைக்குழு தொடர்பாக கேட்கப்பட்டது.
ஒரு ஜனநாயக நாட்டில் மிகப்பெரிய தூணாக இருப்பது ஊடகத்துறை. ஊடகத்துறை
மூலமே ஜனநாயக உரிமைகள் மற்றும் மக்களுக்கு உண்மை வருகிறது. ஊடகத்துறையை
நசுக்கி அதை அரசாங்கம் அடக்க நினைத்தால் அது அந்தநாட்டுக்குதான்
அபகீர்த்தியை ஏற்படுத்தும். ஏற்கனவே ஊடகங்கள் மீது பல சட்டங்கள் இருந்து
அந்த செய்தி வெளிவர முடியாது இருந்தது. மீண்டும் இருண்ட யுகத்திற்கு
கொண்டு வந்தால் அவருக்கே அது இருண்ட யுகத்தை அளிக்கும் தொடர்ந்து இந்த
சட்டத்தை கட்சியாகிய நாம் எதிர்க்கின்றோம். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை