தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்துக்கு தொழில்நுட்ப அதிகாரிகளாக 25 பேர் நியமனம்!

தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களத்தில் தொழில்நுட்ப அதிகாரிகளாக பணியாற்றுவதற்கு 35 பேர் தெரிவுசெய்யப்பட்டு, அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் கடந்த திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

இதற்கான நிகழ்வு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகன் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களத்தில் தொழில்நுட்ப அதிகாரிகள் பதவிகளுக்கு வெற்றிடம் நிலவியது. இதனையடுத்து புதியவர்களை இணைத்துக்கொள்வதற்கு தேசிய மட்டத்தில் பரீட்சை நடத்தப்பட்டது. பரீட்சைமூலம் 35 பேர் தெரிவுசெய்யப்பட்டனர்.

இந்த நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வில், அமைச்சர் உட்பட நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, அமைச்சின் செயலாளர் எஸ்.சமரதிவாகர, தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜயதிலக ஹேரத் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.