ஏ-9 வீதியில் விபத்து ஏழு பெயர் படுகாயம்
சண்முகம் தவசீலன்
ஏ-9 வீதியில் மன்னகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் ஏழு பெயர் காயமடைந்துள்ளனர் இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில் –
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ஹயஸ் வாகனம் மன்னகுளம் பகுதியில் முன்னால் பயணித்த டிப்பர் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் கனகராயன் குளத்துக்கும் மாங்குளத்துக்கும் இடையில் 212 ஆவது கிலோமீற்றர் (மன்னகுளம் ) பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்தையடுத்து டிப்பர் வாகனம் அங்கிருந்து சென்ற நிலையில் பொதுமக்கள்
உதவியுடன் ஹயஸ் வாகனத்திலிருந்த 7 பேர் படுகாயங்களுடன் மீட்க்கப்பட்டு
1990 அம்புலன்ஸ் மூலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை