சாய்ந்தமருது மஸ்ஜிதுல் ஆரிபீனில் புனித ஹஜ் வழிகாட்டல் கருத்தரங்கு
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
சாய்ந்தமருது – மாளிகைக்காடு சமூக வழிகாட்டல் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘புனித ஹஜ் யாத்திரை வழிகாட்டல் கருத்தரங்கு – 2023’ சாய்ந்தமருது மஸ்ஜிதுல் ஆரிபீன் (மக்காம்) பள்ளிவாசலில் அண்மையில் இடம்பெற்றது.
சமூக வழிகாட்டல் அமைப்பின் தலைவரும் சாய்ந்தமருது மஸ்ஜிதுல் ஹூதாப் பள்ளிவாசலின் பேஷ் இமாமுமான அல்ஹாபிழ் மௌலவி ஏ.எஸ்.எம். நவாஸ் (சஃதி) தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், காத்தான்குடி ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் பிரதம இமாம் ஜாமிஉழ்ழாபிரீன் அஷ்ஷெய்க் அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.பாயிஸ் (ஹூமைதி) இந்நிகழ்வில் வளவாளராகக் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் இம்முறை புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் 30 பேர் கலந்து
கொண்டதோடு, இதன்போது ஹஜ் யாத்திரை பற்றிய வழிகாட்டல் நூல் ஒன்றும்
வழங்கப்பட்டு, பல சந்தேகங்களுக்கு செய்முறை விளக்கத்துடன் கூடிய பூரண
விளக்கங்களும் வழங்கப்பட்டன.
கருத்துக்களேதுமில்லை