கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் ஆளுநருடன் தௌபீக் கலந்துரையாடல்!

ஹூஸ்பர்

கிழக்கு மாகாண அபிவிருத்தி, பிரச்சினைகள் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர்
செந்தில் தொண்டமானுக்கும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்
.எஸ் .தௌபீக்குக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் உள்ள
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை காரியாலயமான சௌமிய பவனில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

அனைத்து தரப்பினருடனும் இணைந்து பணியாற்றக்கூடிய ஒருவர் கிழக்கு மாகாண
ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியான விடயம் எனவும் அவரை மக்கள்
முழுமையாக ஆதரிக்கின்றனர் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் தனது வாழ்த்துக்களை
தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில், கிழக்கு மாகாண அபிவிருத்தி,  மாகாணத்தில்  நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை, காணிப் பிரச்சினை, வெளிநாட்டு முதலீடுகள் சம்பந்தமாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந்தச் சந்திப்பின்போது அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் நாடாளுமன்ற
உறுப்பினர் ராமேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.