நாவற்குழியில் பசுமை அறிவொளி இயக்கத்தின் சூழல்தின நிகழ்ச்சி!

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நாவற்குழியில் கடந்த திங்கட்கிழமை பசுமை அறிவொளி நிகழ்ச்சியை நடத்தியுள்ளது.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் மாணவர்களிடையே சூழல் அறிவைப்புகட்டி விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களைச் சூழல் பாதுகாப்பில் பங்குபற்றுநர்களாக்கும் நோக்குடன் பசுமை அறிவொளி என்ற நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாகவே உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு நாவற்குழி முத்தமிழ் கிராமத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த ஆண்டின் சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருளாக ஐக்கிய நாடுகள் சபை ‘பிளாஸ்ரிக் மாசைத் தோற்கடிப்போம்’ என்ற கருப்பொருளைத் தேர்வு செய்துள்ளது.
இந்தக் கருப்பொருளுக்கு அமைவாகத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் இந்நிகழ்ச்சியில் உரையாற்றியதோடு, பங்கேற்ற மாணவர்களுக்கு ‘பிளாஸ்ரிக்கின் பிடியில்’ என்ற கைந்நூலையும்; வழங்கி வைத்தார். அத்தோடு, ரொறன்ரோவின் மனிதநேயக் குரலின் அனுசரணையோடு மாணவர்கள் அனைவருக்கும் அப்பியாசக்கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.