நிலக் கடலை அறுவடை தம்பலகாமத்தில் நிகழ்வு!

;
ஹூஸ்பர்

தம்பலாககம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பத்தினிபுரம் பாலம்போட்டாறு ‘சௌபாக்கியா ‘உற்பத்திக் கிராமத்தின் நிலக்கடலை அறுவடை நிகழ்வு நேற்று (செவ்வாய்க்கிழமை)  இடம்பெற்றது.

சிறு தோட்ட உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக குறித்த பகுதியில் நிலக் கடலை அறுவடைக்கான உதவிகள் வழங்கப்பட்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் இதன் மூலம் பாரிய விளைச்சலை பெற்றுள்ளனர்.

குறித்த நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப் உட்பட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சக விவசாய போதனாசிரியர் எனப் பலர் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.