பொலிஸ் ஜீப் குன்றின் கீழ் விழுந்து விபத்து மூன்று பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் காயம்!
இரவு ரோந்து நடவடிக்கைக்காகப் பயன்படுத்தப்பட்ட நோர்வூட் பொலிஸ் ஜீப் ஒன்று ஹற்றன் பொகவந்தலாவ பிரதான வீதியில் உள்ள குன்றின் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்து டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
நோர்வூட் பகுதியில் உள்ள அனுமதியற்ற மாணிக்கக்கல் குவாரியை சோதனையிடுவதற்காக குறித்த ஜீப் சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கருத்துக்களேதுமில்லை