பரீட்சை மண்டபத்துக்குள் ஓடியவர் யார்? கஜேந்திரகுமாரா ? புலனாய்வு தரப்பினரா? சிறிதரன் சபையில் காட்டத்துடன் கேள்வி

பரீட்சை மண்டபத்துக்கு ஓடியவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமா? அல்லது புலனாய்வு தரப்பினர் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்களா? முறையான விசாரணை செய்யாமல் சபையில் பொய்யான விடயங்களைக் குறிப்பிட்டு நாட்டு மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் ஆளும் தரப்பை நோக்கிக் கடுமையாகச் சாடினார்.

கடும் வாக்குவாதங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்க ஒழுங்குப் பிரச்சினையைக் கிளப்பிய, எஸ்.சிறிதரன் ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை எழுப்பி அமைச்சர் மஹிந்த அமரவீர , கஜேந்திரகுமார் பொலிஸாரைத் தாக்கினார் என அப்பட்டமான பொய் ஒன்றைக்கூறினார். கஜேந்திரகுமார் பொலிஸாரைத் தாக்கினாரா அல்லது பொலிஸார் கஜேந்திரகுமாரை  தாக்கினார்களா? என்பதை முதலில் சரியாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

கஜேந்திரகுமாரை தாக்கிய பொலிஸாரை முதலில் கைது செய்யுங்கள், அவர்களிடம் விசாரணை நடத்துங்கள். கஜேந்திரகுமரை தாக்கி விட்டு அருகில் இருந்த பாடசாலை பரீட்சை மண்டபத்துக்குள் ஓடிச் சென்று ஒளிந்து கொண்டவர்கள் பொலிஸார் தான் எனக்கூறினார். இதனையடுத்து சபையில் அரச தரப்பினர் ”புலி”புலி” எனக்கூச்சலிட்டனர். பதிலுக்கு சாணக்கியன். சிறிதரன் ஆகியோரும் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.