சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறைச் சங்க சம்மேளனம் ஆகியவற்றின் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது.

கொழும்பில் நடைபெற்ற சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச் சங்க சம்மேளளத்தின் தலைவர்களுக்கான மாநாடு தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தெளிவுபடுத்தும் நோக்கிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இந்த மாநாட்டில் தெற்காசியாவிற்கான உலக அனர்த்த அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டதோடு அதன் பிரதியும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இந்த சந்திப்பின்போது கையளிக்கப்பட்டது.

இலங்கையில் செஞ்சிலுவைச் சங்கத்தின் சட்டங்களை அமுல்படுத்துவது தொடர்பாக மேற்படி பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தனர்.

சட்டம் அமுலாக்கப்டுவதால் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தை மேலும் பலப்படுத்திக்கொள்ள முடியும் என்பதோடு, பாதிக்கப்படக்கூடிய மக்களுக்காக சேவைகளை செயற்திறன் மிக்கதாக முன்னெடுக்க முடியும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.