அரச அலுவலகங்களுக்காக வீணடிக்கப்படுகின்றது பணம்! சமிந்த விஜேசிறி குற்றச்சாட்டு

அனைத்து அரச நிறுவனங்களும் அரசாங்கத்துக்குச் சொந்தமான கட்டடங்களில் மாத்திரமே செயற்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் தனிப்பட்ட உறுப்பினர் பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து அரச நிறுவனங்களும் வரி செலுத்துவோரின் பணத்தாலேயே பராமரிக்கப்படுவதாகத் தெரிவித்த விஜேசிறி, அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்திற்கு சொந்தமான கட்டடத்துக்கு மாதாந்தம் 13 லட்சம் ரூபா, தேசிய லொத்தர் சபைக்கு மாதம் 65 லட்சம் ரூபா, கொள்ளுப்பிட்டியில் உள்ள மின்சார அமைச்சுக்கு மாதம் 20 லட்சம் ரூபா, மின்சார சபை நகர அலுவலகத்துக்கு மாதம் 20 லட்சம் ரூபா மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் கட்டடத்திற்கு மாதாந்தம் 20 லட்சம் ரூபா என பணம் வீணடிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.