திருகோணமலை பொதுவைத்தியசாலைக்கு மருந்துவப் பொருள்கள் கையளிக்கப்பட்டன!
வன்னி ஹோப் நிறுவனத்தின் அனுசரணையில் திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மருந்து சார் பொருள்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) கையளிக்கப்பட்டன.
திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் வேண்டுகோளுக்கிணங்க, கண் சத்திர சிகிச்சை நோயாளர்களின் நலன் கருதி கண் வில்லைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
வன்னி ஹோப் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் எம்.ரீ.எம். பாரிஸ், திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் எல்.டபிள்யூ. ஜயவிக்ரமரத்ணவுக்கு வழங்கினார்.
ஐக்கிய அமெரிக்காவில் உள்ள வைத்தியர் வானி பிரேம்ஜிட் குடும்பத்தார் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள ஈஸ்வரி ஜெகநாதன் குடும்பத்தினரின் நிதி உதவியால் வன்னி ஹோப் இலங்கை அலுவலகத்தின் ஏற்பாட்டில் இந்த மருந்து சார் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் கண் சத்திர சிகிச்சை பிரிவு வைத்திய நிபுணர் மற்றும் வன்னி ஹோப் நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை