பிள்ளைகளின் போதைப்பாவனைக்கு பெற்றோரின் கவனவீனமும் காரணம்! கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் தவிசாளர் வேதனை

 

பிள்ளைகள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவதற்கு பெற்றோரின் கவனவீனமும் காரணமாகும் என கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். நசீர் தெரிவித்தார்.

அம்பாறை, சாய்ந்தமருது பகுதியில் சர்வதேச புகைத்தல் மற்றும் மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகம் மற்றும் பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில் கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் அனுசரணையில் ‘புகைத்தலில் இருந்து மீண்ட ஒரு கிராமம்’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற எதிர்ப்பு பேரணி தொடர்பாக விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு –

பிள்ளைகள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவதற்கு பெற்றோரின் கவனவீனமும் காரணமாகும். இந்த விடயத்தில் பெற்றோர்கள் ஒத்துழைக்காவிடின், இந்த போதைப்பொருள் ஒழிப்பு விடயத்தில் முன்னேற்றம் ஏற்படப் போவதில்லை. இதை விட பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்களைத் தமது பிள்ளைகள் போன்று கண்காணிக்க வேண்டும்.

இது தொடர்பில் பல கலந்துரையாடல்களை மேற்கொள்ள இருக்கின்றோம். இதை விட பொலிஸாரின் ஒத்துழைப்புக்களையும் எமது அமைப்பு பெற்றுக்கொண்டு இந்த செயற்திட்டத்தை முன்னெடுக்கும. – என்றார்.

இந்த விசேட செய்தியாளர் சந்திப்பில் கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் நிர்வாக பணிப்பாளர் தபாலதிபர் யூ.எல்.எம். பைசர் மற்றும் சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் றியாத் ஏ.மஜீத் ஆகியோரும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.