கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பால் சி.எஸ்.எம்.டபிள்யு.ஏக்கு நினைவுச் சின்னம்!

 

நூருல் ஹூதா உமர்

பல்வேறு மக்கள் நலன்சார் சேவைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்ற கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பிற்கு என்றும் உறுதுணையாக இருந்து வருகின்ற சி.எஸ்.எம்.டபிள்யு.ஏ. பேரவையைக் கௌரவிக்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது.

சி.எஸ்.எம்.டபிள்யு.ஏ. பேரவையின் தலைவி ஃபிரோஸா காஸிம் இலங்கை வந்திருந்தபோதே இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பின் ஸ்தாபகரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும், முன்னாள் கல்முனை மாநகர பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூரால் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு வை.டபிள்யு.எம்.ஏ. பேரவையின் தலைவி திருமதி ஃபவாஸா தாஹா உட்பட அதன் உயர் நிர்வாக உறுப்பினர்களும், வை.டபிள்யு.எம்.ஏ. பேரவையின் முன்னாள் தலைவர் தேசமானிய காலித் எம்.பாறுக், கனடாவில் வசிக்கும் பிரபல தொழிலதிபரும் சமூக சேவையாளருமான முஹம்மது அஸார் மற்றும் ‘கொழும்பு டைம்ஸ்’ பத்திரிகை தலைமை பதிப்பாசிரியர் முஹம்மது ரஸூல்டீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.