சுதந்திரமாக அறிக்கையிட சந்தர்ப்பங்களை வழங்குக! பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பகிரங்கம்

 

சமூகத்தில் உள்ள தவறுகளை திருத்தும் பொறுப்பு ஊடகவியலாளர்களுக்கு உள்ளது. அந்த பொறுப்பை நிறைவேற்ற அவர்களுக்கு ஊடக சுதந்திரம் முக்கியமாகும். எனவே, ஊடகவியலாளர்களுக்கு சுதந்திரமாக அறிக்கையிட சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

ஊடக அறிக்கையிடலின்போது ஏற்படும் சவால்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடல் எனும் தொனிப்பொருளில் குருநாகலில் நடைபெற்ற செயலமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

சமூகத்தில் உள்ள தவறுகளைத் திருத்தும் பொறுப்பு ஊடகவியலாளர்களுக்கு உள்ளது. அந்த பொறுப்பை நிறைவேற்ற அவர்களுக்கு ஊடக சுதந்திரம் முக்கியமாகும். சுதந்திரமாக அறிக்கையிடும் சுதந்திரம் ஊடகவியலாளர்களுக்கு இருக்க வேண்டும். அதனையே உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பிரகடனத்திலும், 19 ஆம் பிரிவிலும் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக அறிக்கையிட வேண்டும் என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.