அம்பாறை மாவட்ட கிரிக்கெட் சம்பேளனத்தினால் இடம்பெற்ற முதற்கட்ட போட்டியில் காரைதீவு விவேகானந்தா அணி வெற்றி
இலங்கை கிரிக்கேட் கட்டுபாட்டு சபையினால் நடாத்தப்பட்ட 50 ஓவர் கொண்ட போட்டியில் காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து சாயந்தமருது விரைவ் லீடர்ஸ் கழகம் மோதியது.இப்போட்டியானது சாய்ந்தமருது வொலிவோரியன் மைதானத்தில் நடைபெற்றது.இதில் விவேகானந்தா அணி 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய விவேகானந்தா அணி 47.2 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 230 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய விரைவ் லீடர்ஸ் அணி 185 ஓட்ட்ங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்திருந்தது.
இதில் விவேகானந்தா அணியின் தலைவரும்
இளம் வீரரும் ஆன சஞ்சய் துடுப்பாட்டத்தில் கன்னிஅரைசதத்தை கடந்து 58 பந்துகளில் 63 ஓட்டங்களையும், பந்துவீச்சில் 34 ஓட்டங்களுக்கு 3 விக்கேட்டையும் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
பந்து வீச்சில் இளம் வேகப்பந்து வீச்சாளர் பிரசாந்த் விரைவ் லீடர்ஸ் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களை பதம்பார்த்து விவேகானந்தா அணியின் வெற்றியை இலகு படுத்தினார்.இவர் 9 ஓவர்களில் 24 ஓட்டங்களை மட்டும் விட்டு கொடுத்து 4 விக்கட்டுகளை சரித்திருந்தார்.
விரைவ் லீடர்ஸ் அணி சார்பாக மொஹமட் ரிக்காஸ் 94 பந்துகளை 90 ஓட்ட்ங்களை பெற்று கொடுத்தார்.
முழு ஓட்ட விபரம் – https://cricheroes.in/scorecard/7074904/Ampara-District-Div-III-Tournament-2023/Vivekananda-S-C-vs-Brave-Leaders-S-C/scoreboard
(செய்தியாளர்-கபிலன்)
கருத்துக்களேதுமில்லை