இரு மாதங்களுக்குள் இ – டிக்கெட் முறை! பந்துல குணவர்தன அறிவிப்பு
எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் இ – டிக்கெட் முறையை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவித்த அவர், இதன் மூலம் மோசடி ஊடாக இழந்த வருமானத்தை மீளப்பெற முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை மாத்தறையில் இருந்து மகும்புர வரையில் போக்குவரத்துச் சபையால் வழங்கப்பட்ட பயணச்சீட்டு இயந்திரத்தைப் பயன்படுத்தாமல் மற்றுமொரு பயணச்சீட்டுப் புத்தகத்திலிருந்து வழங்கி மோசடி ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை