நிமால் சிறிபால உள்ளிட்டோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படாதாம்! மைத்திரி கூறுகிறார்
அமைச்சுப் பதவிகளைப் பெற்ற 6 சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான குழுவோடு இடமபெற்ற பல சுற்று கலந்துரையாடல்களை அடுத்து அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தீர்மானித்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றமையையடுத்து, கட்சிக்குள் அவர்கள் வகித்து வந்த பதவிகளை நீக்கவும், இடைநிறுத்தவும், ஒழுக்காற்று நடவடிக்கையை கட்சி ஆரம்பித்தது.
எவ்வாறாயினும், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த தீர்மானத்தை நீதிமன்றில் சவால் செய்த நிலையில் தற்போது சமரசம் ஆகியுள்ளது.
கருத்துக்களேதுமில்லை