வடக்கில் வைத்தியர்கள் மற்றும் சட்டத்தரணிகள் முன்னெடுக்கவுள்ள விசேட திட்டங்கள்!

வடக்கு மாகாணத்தில் வைத்தியர்கள் மற்றும் சட்டத்தரணிகள் இடையே சிநேகபூர்வமான துடுப்பாட்டப் போட்டி மற்றும் வலைப்பந்தாட்டப் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குறித்த போட்டிகள் யாழ்ப்பாண மருத்துவ சங்கத்தினால் இம்முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரண்டாவது வருடமாக நாடாத்தப்படவுள்ள துடுப்பாட்டப் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை (17) காலை 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

தொடர்ச்சியாக, பெண் வைத்தியர்கள் மற்றும் சட்டத்தரணிகள் இடையே முதன்முறையாக வலைப்பந்தாட்டப் போட்டிகளும் இடம்பெறவுள்ளன.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே போட்டி தொடர்பான விடயங்கள் அறிவிக்கப்பட்டதுடன், கடந்த வருடம் முதல் தடவையாக நாடாத்தப்பட்ட துடுப்பாட்டப் போட்டியில் சட்டத்தரணிகள் அணி வெற்றி பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.