இலங்கையில் அமெரிக்க டொலரில் ஏற்படும் சடுதியான மாற்றம்!..T

இலங்கையில் மீண்டும் அமெரிக்க டொலரின் பெறுமதி வலுப்பெற ஆரம்பித்துள்ளது.

அதன்படி நாட்டிலுள்ள பல வர்த்தக வங்கிகள் இன்று (15.06.2023) வௌியிட்டுள்ள வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில் டொலரின் பெறுமதி உயர்ந்துள்ளது.

அந்த வகையில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 315 ரூபாவாகவும், விற்பனை விலை 335 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

வங்கிகளில் டொலரின் நிலவரம்
இலங்கை வங்கியில் டொலரின் கொள்முதல் விலை 315.00 ரூபாவாகவும், விற்பனை விலை 335 ரூபாவாகவும் காணப்படுகிறது.

 

மக்கள் வங்கியில் டொலரின் கொள்முதல் விலை 313.46 ரூபாவாகவும், விற்பனை விலை 328.20 ரூபாவாகவும் காணப்படுகிறது.

சம்பத் வங்கியில் டொலரின் கொள்முதல் விலை 311.28 ரூபாவாகவும், விற்பனை விலை 328.00 ரூபாவாகவும் காணப்படுகிறது.

ஹட்டன் நஷனல் வங்கியில் டொலரின் கொள்முதல் விலை 313.00 ரூபாவாகவும், விற்பனை விலை 330 ரூபாவாகவும் காணப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.