566 கி.மீ. தூரத்தை 3 நாள்களில் நடந்து சென்று பொகவந்தலாவை இரட்டையர் சாதனை படைப்பு!
யாழ்ப்பாணத்திலிருந்து காலி வரையிலான 566 கிலோ மீற்றர் தூரத்தை மூன்று நாள்களில் நடந்தே சென்று சாதனை படைக்கும் முயற்சியில் இறங்கியுள்ள பொகவந்தலாவையை சேர்ந்த இரட்டையர் வவுனியாவை வந்தடைந்தனர்.
பொகவந்தலாவை, கொட்டியாக்கலை தோட்டத்தை சேர்ந்த இரட்டையர் புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் தமது சாதனை பயணத்தை யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பித்து, 9 மணித்தியாலங்களில், பிற்பகல் ஒரு மணியளவில் வவுனியா நகரை வந்தடைந்ததோடு, மீண்டும் தமது பயணத்தைத் தொடர்ந்தனர்.
இரட்டையரான ஆர்.ஏ.விக்னேஷ்வரன் மற்றும் தயாபரன் ஆகிய இருவரும் யாழ்ப்பாணம் தொடக்கம் காலி வரை 566 கிலோ மீற்றர் தூரத்தை மூன்று நாள்களில் ஓய்வு எடுக்காமல் நடந்து உலக சாதனை படைக்கவுள்ளனர்.
இதேவேளை, இதற்கு முன்னர் இவர்கள் யாழில் இருந்து காலி வரையிலான 566 கிலோ மீற்றர் தூரத்தை நான்கு நாள்கள் நடந்தும், புத்தளத்தில் இருந்து சீதுவை வரையிலான 147 கிலோ மீற்றர் தூரத்தை வெறுமனே ஆறு மணி நேரத்திலும் பயணித்து சாதனை படைத்துள்ளதுடன், கொழும்பில் இருந்து பொகவந்தலாவை வரையிலான 184 கிலோ மீற்றர் தூரத்தை 18.5 மணித்தியாலங்களில் நடந்து சாதனை படைத்திருந்தனர்.
மேலும், இந்த இரட்டையரில் தயாபரன் ஒரு நடனக்கலைஞர் என்பதும், அவர் தமிழகத்தின் பிரபல நடிகரான ராகவா லோரன்ஸிடம் நடனம் கற்றவர் என்பதும், அவர் முன்னதாக இலங்கையில் தொடர்ச்சியாக 10 நாள்கள் இடைவிடாமல் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை