கனேடியத் தமிழ் பேரவையால் 70 வட்சம் ரூபாவுக்கு மருந்து! வவுனியா பொது வைத்தியசாலைக்கு வழங்கல்

கனேடியத் தமிழ் பேரவையால் வவுனியா வைத்தியசாலைக்கு 70 லட்சம் ரூபா பெறுமதியான  மருந்துகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கனேடியத் தமிழ் பேரவை ஆண்டுதோறும் தமிழ் கனேடியர்களின் நிதியுதவியின் ஊடாகப் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடைகளை வழங்கி வருகின்றன.

இந்நிலையில் இலங்கையில் தற்போது நிலவிவரும் மோசமான பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு   வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் தெற்கு ஆகிய நான்கு பிராந்தியங்களில் உள்ள ஆறு வைத்தியசாலைக்கு சுமார் 70 லட்சம் ரூபா பெறுமதியான மருத்துவப்  பொருள்களை கனேடியத் தமிழ் பேரவை வழங்கியுள்ளது.

அந்தவகையில் வவுனியா வைத்தியசாலை மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் செந்தூர்பதிராஜா, முன்னாள் வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், அமைப்பின் பிரதித்தலைவர் ரவீனா ராஜசிங்கம் மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் எனப்  பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.