ஒரு வருடத்திற்குள் நான்கு வீடுகள் – வேறு இருப்பிடத்தை கோரும் கோட்டாபய..T
தமக்கு வேறு உத்தியோகபூர்வ இல்லத்தை வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் தற்போது கொழும்பு 7, மலலசேகர மாவத்தையில் உள்ள தனது குடியிருப்பில் தங்கியுள்ளார்.
அதற்கு பதிலாக, அவர் ஸ்டான்மோர் சந்திரவங்க பகுதியில் ஒரு உத்தியோகபூர்வ இல்லத்தை கேட்டுள்ளார்.
குடியிருப்பை மாற்றுமாறு கோரிக்கை
தற்போதுள்ள குடியிருப்புகளை சுற்றி அடிக்கடி சத்தம் கேட்கும் என்பதால், அந்த குடியிருப்பை மாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுவரை, கோட்டாபய ராஜபக்ச ஒரு வருடத்திற்குள் நான்கு வீடுகளை மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை