தோலில் புள்ளிகள் தென்பட்டால் உடனடியாக தொடர்பு கொள்ளவும்! விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்..T
நாட்டில் தற்போது தொழுநோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு இயக்கம் தெரிவித்துள்ளது.
இதற்கயைம, கடந்த 5 மாதங்களில் சுமார் 600 தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும் தொழுநோய் கட்டுப்பாட்டு இயக்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு இயக்கத்தின் பதில் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.
விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்
இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 100 தொழுநோயாளிகளும், கம்பஹா மாவட்டத்தில் 66 பேரும், மட்டக்களப்பில் 56 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 47 பேரும் பதிவாகியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் தொற்றினால் அடையாளம் காணப்பட்ட நோயாளிகள் அவர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதற்காக மருத்துவ சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே தொழுநோய் என சந்தேகிக்கப்படும் தோலின் மேற்புறத்தில் புள்ளிகள் இருப்பின் புகைப்படத்தை 075 40 88 640 என்ற தொலைபேசி எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்து தகவல் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை