ஊடகங்கள் தொடர்பான சட்டமூலத்தை எதிர்க்க இல்லை : டளஸ் அழகப்பெரும!
ஜனநாயக நாடுகளில் பின்பற்றப்படும் சட்டங்களை முன்னுதாரணமாகக் கொண்டு அரசாங்கம் செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாடுகளில் இருப்பதைப் போன்று, ஊடக ஒழுங்குமுறை அவசியம் என்பதை நாமும் ஏற்றுக் கொள்கிறோம்.
1997 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற நீதியரசர் உள்ளிட்ட மூவர் அடங்கிய நிதிபதிகள் குழாமினர், இந்த ஊடக சட்டங்கள் தொடர்பாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்பொன்றை வழங்கியுள்ளனர்.
அதாவது, இவ்வாறான சட்டமூலங்களை நிறைவேற்ற நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என்பதோடு, சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நீதி அமைச்சரும் அறிவார் என்று நாம் நம்புகிறோம். இவ்வாறான சட்டமூலமொன்று தேவையில்லை என்று இங்கு யாரும் கூறவில்லை.
ஆனால், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் நிச்சயமாக கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள வேண்டும்.
நவீன ஊடகங்களுக்கு இவ்வாறான நெறிமுறைகள் அவசியம். வளர்ச்சியடைந்த, ஜனநாயக நாடுகளில் பின்பற்றப்படும் சட்டங்களை முன்னுதாரணமாகக் கொண்டு இந்த விடயத்தில் அரசாங்கம் செயற்பட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை