புத்தளத்தில் மின்சார வேலியில் சிக்குண்ட யானை சடலமாக மீட்பு

புத்தளம் மஹாகும்புக்கடவல பிரதேசத்தின் கவயாங்குளம் பகுதியில் காட்டு யானையொன்று உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு யானை உயிரிழந்துள்ளதாக பிரதேச மக்கள் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து குறித்த இடத்திற்கு அதிகாரிகள் சென்று யானையைப் பார்வையிட்டுள்ளனர்.

குறித்த யானை மின்சாரவேலியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிவலு கொண்ட மின்சார வேலியை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் பொருத்தியுள்ளதாகவும் குறித்த மின்சார வேலியில் சிக்கூண்டே யானை உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன்போது காணியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு ஆனமடுவ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த யானைக்கு நிகாவெரெட்டிய மிருக வைத்தியர் டொக்டர் இசுரு என்பவரால் பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த யானை சுமார் 8 அடி உயரம் கொண்டதாகவும் 20 வயது மதிக்கத்தகது எனவும் புத்தளம் வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.