பொருளாதார வளர்ச்சியை தனிப் பெறுமானத்திற்கு கொண்டு வர நடவடிக்கை : அமைச்சர் நளின்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்ட சரியான தீர்மானங்களின் காரணமாக அரிசி இறக்குமதி செய்வதற்கு செலவிடப்பட்ட 350 மில்லியன் அமெரிக்க டொலர்களை சேமித்துக்கொள்ள முடிந்துள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஸ்திரமான நாட்டிற்கு, அனைவரும் ஒரே வழிக்கு என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் அமைச்சர் நளின் பெர்னாண்டோ இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் தற்போது பொருட்கள் இறக்குமதி செயற்பாடுகள் சிறந்த முறையில் இடம்பெறுகின்றன என்றும் நிறுவனங்களுக்கு அவசியமான கடன் பத்திரங்களை விநியோகிக்கும் செயற்பாடுகளும் வலுவாக முன்னெடுக்கப்படுகின்றது என்றும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

மேலும், ஒக்டோபர் மாதமளவில் பொருளாதார வளர்ச்சியை தனிப் பெறுமானத்திற்கு கொண்டு வருவதற்கான இயலுமை கிட்டும் என நம்பிக்கை உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

விற்பனை செய்யப்படும் அனைத்து பொருட்களுக்குமான குறைந்தபட்ச சில்லறை விலையினை நிர்ணயிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு, அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அவசியமான சூழல் தற்போது உருவாகியுள்ளது என்றும் பொது மக்களுக்கான சலுகைகளை வழங்க முன்வராத நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும் பின்வாங்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.