சர்வதேச யோகா தினம் காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி மைதானத்தில்…
சர்வதேச யோகா தினத்தினை முன்னிட்டு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில்,
அம்பாறை மாவட்டச் செயலகம் நடாத்தும் யோகா தின நிகழ்வு காரைதீவு விபுலானந்தா தேசிய பாடசாலை
மைதானத்தில் இடம்பெற்றது.
நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட செயலாளர் ஜே.எம்.ஏ. டக்லஸ் கலந்து கொண்டார்.
அதிதிகள் கலை கலாசார பாரம்பரிய நிகழ்வுகளுடன் வரவேற்கப்பட்டதுடன், கொடிகள் ஏற்றப்பட்டு
இறைவணக்கமும் இடம்பெற்றது.
யோகா உறுதி உரை ஏற்புடன், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வளவாளர்களால்
யோகாவின் சில அடிப்படை ஆசனங்கள் நிகழ்த்திக் காட்டப்பட்டன.
அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீஸன், காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன்,
உதவி பிரதேச செயலாளர் எஸ்.பார்த்தீபன், காரைதீவு கோட்டக் கல்வி அதிகாரி, காரைதீவு பொலிஸ் நிலைய
பொறுபதிகாரி எனப் பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை