பல்கலை வாய்ப்புக் கிடைத்துள்ள மாணவர்களுக்கு வட்டியில்லாகடனை விரைவில் பெற்றுக்கொடுப்போம்  பிரதமர் தினேஷ் உறுதி

நிதி பிரச்சினையை முகாமைத்துவம் செய்துகnhண்டு, அரச பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாத்திரமல்லாது, தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் வட்டியில்லா கடன் வசதியை பெற்றுக்கொடுக்க மிக விரைவில் நடவடிக்கை எடுப்போம். அது தொடர்பில் தற்போது கலந்துரையாடி வருகிறோம் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவால் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –

பல்கலைக்கழக வாய்ப்பு கிடைக்கப்பெறும் மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் கல்வி நிறுவனங்களில் உயர் கல்வியை தொடருவதற்கான வட்டியில்லா கடன் வழங்கும் திட்டம் தொடர்பாக கல்வி அமைச்சர் இந்த சபைக்கு இதற்கு முன்னர் அறிவித்திருந்தார்.

அதேநேரம் கல்வி அமைச்சரால் அமைச்சரவைக்கு இது தொடர்பில் சமர்ப்பித்திருந்த அமைச்சரவை பத்திரத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கி இருந்தது.

அதன் பிரகாரம் தற்போது இதுதொடர்பான நிதி ஒதுக்கீடு தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை விரைவாக மேற்காளெ;ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருகிறது.

நான் கல்வி அமைச்சரராக இருந்த குறுகிய காலத்தில்  தனியார் பல்கலைக்கழகங்கள் பலவற்றுக்கு இந்த திட்டத்திpன் கீழ் நாங்கள் பணம் வழங்கி இருந்தோம். இந்த நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கும் கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் நடவடிக்கை எடுத்திருந்தோம்.

எனவே தற்போது உள்ள நிதி பிரச்சினையை முகாமைத்துவம் செய்துகொண்டு, அரச பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாத்திரமல்லாது, தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் வட்டியில்லா கடன் வசதியை பெற்றுக்கொடுக்க மிக விரைவில் நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கிறோம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.