காத்தான்குடியிலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலுக்கு கிழக்கு ஆளுநர் விஜயம்
காத்தான்குடியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சென்று இறை வழிபாட்டில் ஈடுபட்டதுடன், தமிழ்மொழி மொழிபெயர்ப்புடன் கூடிய குர்ஆன் பிரதி பள்ளிவாசல் கதீபினால் வழங்கி வைக்கப்பட்டது.
கிழக்கு ஆளுநர், இறைவனின் அருளே இன்று இப்பள்ளிவாசலை தரிசிக்க கிடைத்தமைக்கு காரணம் எனவும் இதனால் தான் மிகவும் சந்தோஷம் அடைந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்நிகழ்வில் பள்ளிவாசல் நிர்வாகிகள், கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் பணிப்பாளர், பிரதேச செயலாளர், காத்தான்குடி நகரசபை செயலாளர், காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு, தங்களது வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் ஆளுநருக்கு தெரிவித்தனர்
கருத்துக்களேதுமில்லை