சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை சீர்குலைத்தால் நாடு பின்னோக்கிசெல்லும்! எச்சரிக்கிறார் ரஞ்சித் சியாம்பலபிட்டிய

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் சீர்குலைந்தால் நாடு கடந்த வருடம் ஜூலை மாதம் இருந்த நிலைமைக்கு திரும்பும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ருவன்வெல்ல பிரதேசத்தில்ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு ஆதரவு தெரிவிக்கப்போவதில்லை என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ள நிலையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.