அராலியில் கோர விபத்து – இருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – அராலி, வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் வெளி பகுதியில் இன்று நண்பகல்  இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்தில் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த , 37 வயதான மகேஸ்வரன் மயூரன்  என்பவரும்  அராலி மத்தியைச்  சேர்ந்த  29 வயதான ஜெயசுந்தரம் சரோஜன் என்பவரும் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  இது குறித்த மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.