அரசாங்கத்தின் நலன்புரி உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு : கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்துக்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்
அரசாங்கத்தின் நலன்புரித் உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு எனவும், தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளில் முறைகேடுகள் எனவும் தெரிவித்து கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் முன் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று வியாழக்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டது.
இன்றைய தினம் காலை ஓட்டமாவடி கொழும்பு வீதியில் ஒன்று கூடிய பிறைந்துறைச்சேனை 204 ஏ பிரிவு சமுர்த்தி பயனாளிகளால் வாசகங்கள் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் ஊர்வலமாக ஓட்டமாவடி, கொழும்பு பிரதான வீதி வழியாக பிரதேச செயலகம் வரை நடந்து சென்றனர்.
அரசாங்கத்தின் நலன்புரி உதவிதிட்டகொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர் பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்த நிலையில் இரு நேரம் மட்டும் உணவை உட்கொண்டு வாழ்பவர்கள், விசேட தேவைக்குட்பட்டவர்கள், முதியோர்கள், விதவைகள், உட்பட வறுமைக்கோட்டிற்குட்பட்டவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படாமல் வெளிநாடுகளில் இருப்போர், வசதியானவர்களுக்கே இவ் உதவி கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தே இவ் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
பிரதேச செயலகம் கோறளைப்பற்று மத்தி வளாகத்தில் ஒன்று கூடிய மக்கள் தமக்கு நீதி கோரி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கோரிக்கை அடங்கிய மகஜரை செயலக திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.றுவைஸ் பெற்றுக்கொண்டார். மக்களுடன் சம்பவம் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார்.
இது கிடைக்கதாவர்கள் மேன்முறையீடு செய்யலாம் என்றும் தகுதியற்வர்கள் தொடர்பாகவும் தெரியப்படுத்துமாறும் மேன் முறையீடு செய்வதற்காக அலுவலகத்தில் சகல வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததுடன் உடனடியாக விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டார்.
கருத்துக்களேதுமில்லை