தேசிய கடன் மறுசீரமைப்பு திட்டத்தை ஏற்கமாட்டோம்! மரிக்கார் எம்.பி. பகிரங்கம்

ஊழியர் சேமலாப நிதியத்தில் கை வைக்காது தேசிய கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு பல வழிமுறைகள் உள்ளன.

எனவே தற்போது அரசாங்கம் முன்வைத்துள்ள தேசிய மறுசீரமைப்பு திட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

மத்திய வங்கி ஆளுநர் மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஆகியோர் உள்நாட்டு கடன் மறுசீரமைக்கப்படமாட்டாது என ஆரம்பத்திலிருந்தே தெரிவித்து வந்தனர்.

ஆனால் தற்போது தேசிய கடன் மறுசீரமைப்புக்கு அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்று , அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் என்றுமில்லாதவாறு முதன்முறையாக இதற்காக ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளன.

உண்மையில் இதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டிய தேவை கிடையாது. இதன் மூலம் கட்சிகளுக்குள் முரண்பாடுகளை தோற்றுவிப்பதே அரசாங்கத்தின் இலக்காகும்.

எவ்வாறிருப்பினும் தேசிய கடன் மறுசீரமைப்பு எனக் கூறி ஊழியர் சேமலாப நிதியத்தில் கைவைக்கப்பட்டுள்ளமையை நாம் முற்றாக எதிர்க்கின்றோம்.

ஊழியர் சேமலாப நிதியத்தில் கை வைக்காமல் தேசிய கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்குப் பல வழிகள் உள்ளன.  சர்வதேச நாணய நிதியம் இதனைக் கோரவுமில்லை. – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.