சிப்தொற புலமைப் பரிசில் காரைதீவில் வழங்கல்!
காரைதீவு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி நிவாரணம் பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட (22ஃ24) ஆம் கல்வி ஆண்டில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் 89 மாணவர்களுக்கு சிப்தொற புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் காரைதீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் வே. ஜெகதீசனும் மற்றும் காரைதீவு பிரதேச சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் மற்றும் முகாமையாளர்கள், உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை