புத்தளத்தில் வீசிய பலத்த காற்றால் நகரசபை கடைத் தொகுதி சேதம்!

பலத்த காற்று வீசியதால் புத்தளம் நகரசபை கடைத் தொகுதியின் கூரைத் தகடுகள் அள்ளுண்டு சென்றுள்ளன.

புத்தளம் மாவட்டத்தில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படுவதால் பாதுகாப்பாக செயற்படுமாறு புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பலத்த காற்று வீசியதால் புத்தளம் நகரசபைக் கடைத் தொகுதியின் இரண்டு கடைகளின் கூரைத் தகடுகள் காற்றால் அள்ளுண்டு சென்றுள்ளன.

இதனையடுத்து புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் புத்தளம் நகரசபை ஊழியர்கள் இணைந்து திருத்தப்பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.