இலங்கைக்கான விமான சேவையை மீண்டும் ஆரம்பித்தது ‘ஏர் சைனா’!

உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்றுக்குப் பிறகு சீன விமான நிறுவனமான ‘ஏர் சைனா’ மீண்டும் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பித்துள்ளது.

குறித்த நிறுவனத்தின் முதல் விமானம் திங்கட்கிழமை இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை  வந்தடைந்தது.

கொரோனா தொற்று காரணமாக சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர், இந்த சீன விமான நிறுவனம்  இலங்கைக்கான விமான சேவையை  தற்காலிகமாக நிறுத்தியது .

குறித்த விமானம்  ஏ-320 ஏர்பஸ் ரக விமானம் பயன்படுத்தப்பட்டது. சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள செங்டு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சீனா ஏர்லைன்ஸ் விமானம் சி.சி.ஏ.-425 ஏ-320 ஏர்பஸ் ரக விமானம் கடந்த திங்கட்கிழமை இரவு 08.20 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.அந்த விமானத்தில் 142 பயணிகளும் 09 விமான ஊழியர்களும் பயணித்தனர் .

குறித்த விமான சேவை ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சீனாவின் செங்டுவிலிருந்து இரவு 08.55 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளது.

மீண்டும் அதே விமானம் கட்டுநாயக்காவிலிருந்து அதே நாளில் இரவு 10.15 மணிக்கு சீனாவின் செங்டுவுக்குப்  புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா ஏர்லைன்ஸ் விமானத்தை வரவேற்க இலங்கைக்கான சீனத் தூதுவர்  மற்றும் பெரும் எண்ணிக்கையான  மக்கள் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.