ரணில் முன்பு போன்று இல்லையாம் பகிரங்கமாகச் சாடிய பொன்சேகா!
அரசாங்கத்துடன் கைகோர்க்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் கூறுகையில்,இலங்கை குழப்பமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. திருடர்கள் நடத்தும் எந்த முயற்சிக்கும் உதவப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க, தங்களுடன் இணைந்து பணியாற்றிய போது இருந்ததை விட தற்போது வித்தியாசமானவர்.
ஊழலுக்கும் கொள்ளைக்கும் உதவுவதற்காக நாங்கள் இங்கு வரவில்லை. மக்களின் ஆணையைப் பெற்று நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக வந்துள்ளோம் என்றும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை